செங்கல்பட்டு: செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில், துணை மின் நிலையம் உள்ளது. இங்கிருந்து, அரசு மருத்துவமனை மற்றும் செங்கல்பட்டு நகரை சுற்றியுள்ள கிராமப்புறங்களுக்கு மின் வினியோகம் செய்யப்படுகிறது.
இந்நிலையில், துணை மின் நிலையத்தில் இருந்த மின் மாற்றி, நேற்று முன்தினம், திடீரென தீப்பற்றி எரிந்தது. தகவலறிந்து வந்த செங்கல்பட்டு தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.
தொடர்ந்து, செங்கல்பட்டு மின் வாரிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், திம்மாவரம் பகுதியில் இருந்து, அரசு மருத்துவமனை மற்றும் கிராமங்களுக்கு, உடனடியாக மின் இணைப்பு வழங்கினர்.
துணை மின் நிலையத்தில் புதிதாக மின் மாற்றி அமைக்க உள்ளதாக, மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.