வாலாஜாபாத்: வாலாஜாபாத் அடுத்த, வில்லிவலம் கிராமத்தைச் சேர்ந்தவர் லோகநாதன், 27; கூலித்தொழிலாளி.
இவர், நேற்று முன் தினம் இரவு, 7:30 மணிக்கு, ஆர்- - 15 இரு சக்கர வாகனத்தில், அண்ணன் சதிஷ் என்பவருடன், முத்தியால்பேட்டை கிராமத்தில் இருந்து, களியனுார் கிராமத்தை நோக்கி சென்றனர்.
அதே வழித்தடத்தில் சென்ற, 'ஸ்பிளண்டர்' இரு சக்கர வாகனம், நத்தப்பேட்டை ரயில் நிலைய கடவுப் பாதைக்கு முன், திடீரென திரும்பி உள்ளது.
இதில், இரு வாகனங்களும் மோதிக்கொண்டன. காயமடைந்த லோகநாதனை, அவ்வழியே சென்றவர்கள் மீட்டு, அவசர ஆம்புலன்ஸ் வாகனத்தில், காஞ்சிபுரம் அரசு மருத்துமனைக்கு அனுப்பிவைத்தனர்.
அங்கு, பரிசோதனை செய்த மருத்துவர்கள், வரும் வழியில் லோகநாதன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
விபத்து குறித்து, வாலாஜாபாத் போலீசார் விசாரிக்கின்றனர்.