சென்னைதிருவள்ளூர் ஹாக்கி அமைப்பு சார்பில், டி.பி.எல்., எனும் 'திருவள்ளூர் ஹாக்கி பிரீமியர் லீக் - 2023' சாம்பியன்ஷிப் போட்டிகள், போரூரில் உள்ள தனியார் பல்கலை வளாகத்தில் நடக்கின்றன.
திருவள்ளூர் மாவட்டத்திற்கு உட்பட்ட ஆவடி ப்ளூஸ், மாஸ்கோ மேஜிக், பட்டாபிராம் ஸ்டிரைக்கர்ஸ், ஹாக்கி ஸ்டார், எஸ்.எம்., நகர் உட்பட எட்டு அணிகள் பங்கேற்றுள்ளன.
நேற்று முன்தினம் நடந்த ஆட்டத்தில், கே.ஜி.எஸ்., ஹாக்கி கிளப் மற்றும் தியாந்த் வீரன்ஸ் அணிகள் மோதின. விறுவிறுப்பான ஆட்டத்தில், இரு அணிகளும், 3 - 3 என்ற கோல் கணக்கில் 'டிரா'வில் முடிந்தது. இதைத் தொடர்ந்து, 'ஷூட் அவுட்' சுற்று நடத்தப்பட்டது.
அதில், தியாந்த் வீரன்ஸ் அணி, 3 - 2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, கூடுதல் புள்ளிகளை கைப்பற்றியது. ஆட்ட நாயகனாக லட்சுமண் கரன் தேர்வு செய்யப்பட்டார்.
மற்றொரு ஆட்டத்தில், ஆவடி ப்ளூஸ் - ஹாக்ஸ்டார்ஸ் அணிகள் மோதியது. 2 - 1 என்ற கோல் கணக்கில், ஆவடி ப்ளூஸ் அணி வெற்றி பெற்றது.