ஸ்ரீபெரும்புதுார்: திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன், 29. இவர், படப்பை, லட்சுமி நகரில் தங்கி, குன்றத்துார் அருகே, திருமுடிவாக்கம் சிட்கோவில் உள்ள தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், நேற்று, பாலமுருகன் தான் தங்கியிருந்த அறையில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மணிமங்கலம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.