சைதாப்பேட்டை, ஆதம்பாக்கம், கக்கன் நகரைச் சேர்ந்தவர் சுனில்குமார், 22. நேற்று முன்தினம், இருசக்கர வாகனத்தில் தி.நகர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
சைதாப்பேட்டை, தாடண்டர் நகர் சிக்னல் அருகே சென்றபோது, பறந்து வந்த பட்டத்தின் மாஞ்சா நுால், முகத்தில் அறுத்ததில், சுனில்குமார் பலத்த காயமடைந்தார்.
சைதாப்பேட்டை போலீசார் விசாரணையில், சைதாப்பேட்டை, ரயில்வே பார்டர் தெருவைச் சேர்ந்த பிரவீன், 21, தனுஷ், 19, என தெரிந்தது.
இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து, மாஞ்சா நுால் மற்றும் பொருட்களை பறிமுதல் செய்தனர்.