மதுரை: மதுரையில் இருவேறு சாலை விபத்துகளில் இரு வழக்கறிஞர்கள் பலியாகினர்.
ராமநாதபுரம் மாவட்டம், தெற்கு காட்டூரைச் சேர்ந்தவர் அஜத்கோஷ், 38; உயர்நீதிமன்ற கிளை வழக்கறிஞர். நேற்று முன்தினம் இரவு மதுரை உத்தங்குடி மெயின் ரோட்டில் டூ வீலரில் வந்து கொண்டிருந்தார்.
அப்போது, காரில் முன்னால் சென்று கொண்டிருந்த கூடலுார் அபுபக்கர் சித்திக், 39, ஹோட்டலுக்கு செல்ல திடீரென திரும்பினார். இதனால் டூ வீலர் கட்டுப்பாட்டை இழந்து கார் மீது மோதியதில், அஜத்கோஷ் தலையில் காயமடைந்து இறந்தார். தல்லாகுளம் எஸ்.ஐ., சுந்தரபாண்டியன் விசாரிக்கிறார்.
மதுரை, விளாச்சேரி வழக்கறிஞர் நடராஜன், 52, நேற்று முன்தினம் இரவு ஹார்விபட்டி பகுதியில் டூ வீலரில் வந்தபோது, ஆட்டோ மோதியதில் இறந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.