அன்னுார்;வார சந்தை ஒப்பந்ததாரருக்கு பேரூராட்சி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கோவை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த விவசாயிகள் குறை கேட்பு கூட்டத்தில், அன்னுார் விவசாயிகள் அளித்த மனுவில், 'அன்னுார் வார சந்தையில் அரசு நிர்ணயித்த சுங்க கட்டணத்தை விட கூடுதலாக விவசாயிகளிடம் வசூலிக்கப்படுகிறது.
கட்டணம் குறித்த விளம்பர பலகை வைக்கவில்லை,' என தெரிவித்திருந்தனர்.
இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம், அன்னுார் பேரூராட்சிக்கு உத்தரவிட்டது.
இதையடுத்து, அன்னுார் பேரூராட்சி சார்பில், வார சந்தை ஒப்பந்ததாரர் சுகுமாருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், ' வார சந்தையில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக வசூலிப்பதாகவும், ரசீது தருவதில்லை' எனவும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
'இதற்கு எழுத்துப்பூர்வமான பதில் ஒரு வாரத்திற்குள் பேரூராட்சி அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
'தவறும் பட்சத்தில் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,' என தெரிவிக்கப்பட்டுள்ளது.