சாத்துார்---சாத்தூரில் கிழக்கு அ.தி.மு.க., சார்பில் மே தின பொதுக்கூட்டம் நடந்தது.
மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் பேசியதாவது: தி.மு.க., அரசு பட்டாசு தொழிலை பாதுகாக்க தவறிவிட்டது. பம்பை நதி -- வைப்பாறு நதிகள் இணைப்பு திட்டம், காவேரி - குண்டாறு நதி இணைப்பு திட்டம்.
அ.தி.மு.க., அரசு கொண்டு வந்தது. இந்தத் திட்டத்தை தி.மு.க கிடப்பில் போட்டு விட்டது. இந்த நதி நீர் இணைப்பு திட்டம் குறித்து விருதுநகர் மாவட்ட அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு என 2 அமைச்சர்கள் இருந்தும் ஒரு வார்த்தை கூட சட்டசபையில் பேசியதில்லை. ஒரு குண்டூசியை கூட அவர்கள் நகர்த்தவில்லை, என்றார்.
இளைஞர் இளம்பெண்கள் பாசறை மாநில செயலாளர் பரமசிவம், முன்னாள் எம்.எல்.ஏ. சுப்பிரமணியன், நகரச் செயலாளர் இளங்கோவன், ஒன்றியச் செயலாளர் சண்முககனி பங்கேற்றனர்.