பரமக்குடி-பரமக்குடி ஐந்து முனை ரோடு அருகில் எஸ்.டி.பி.ஐ., சார்பில் மணிப்பூர் கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதலை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
பரமக்குடி நகர் தலைவர் அகமது இப்ராஹிம் தலைமை வகித்தார். மேற்கு மாவட்ட பொதுச் செயலாளர் பாஞ்சுபீர், பரமக்குடி சட்டசபை தொகுதி தலைவர் மகாதீர் முகமது உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். நகர் செயலாளர் நவாஸ் ஷெரீப் வரவேற்றார்.
நகர் செயலாளர் செய்யது சுல்தான், மேற்கு மாவட்ட தலைவர் நூருல் அமீன், பரமக்குடி சி.எஸ்.ஐ., தேவாலய பாதிரியார் இயேசு பிரகாஷ் பலர் பேசினர்.
அப்போது மணிப்பூர் பழங்குடி கிறிஸ்தவ மக்களுக்கு ஆதரவாகவும், மத்திய அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர். நகர் செயற்குழு உறுப்பினர் ஹேமநாதன் நன்றி கூறினார்.