மதுரை;மதுரை நாகமலை புதுக்கோட்டையில் மண்டல அ.தி.மு.க., தகவல் தொழில்நுட்ப பிரிவின் சார்பில் கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமியின் பிறந்த நாளை முன்னிட்டு 'எடப்பாடியார் கோப்பை' இறகு பந்து போட்டி நடந்தது. எம்.எல்.ஏ., ராஜன் செல்லப்பா, தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ராஜ்சத்யன் குத்துவிளக்கேற்றி துவக்கினர்.
போட்டி ஜூனியர், சீனியர், ஆடவர் ஒற்றையர், இரட்டையர், களப்பு இரட்டையர்கள் உள்ளிட்ட பிரிவுகளில் நடந்தது. வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பையும், சிறப்பு பரிசும் வழங்கினர். மாவட்ட எம்.ஜி.ஆர்., இளைஞரணி செயலாளர் ரமேஷ், ஒன்றிய செயலாளர் முருகன், வர்த்தக அணி செயலாளர் ஜெயக்குமார், பி.என்.எஸ். அகாடமி நிறுவனர் நீதி, நிர்வாகி ராஜ்குமார், மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.