கடலுார்: கடலுார் அரசு மருத்துவமனை வளாகத்தில் மயில் ஒன்று இறந்துகிடந்தது.
கடலுார் அரசு தலைமை மருத்துவமனையில் கடந்த சில நாட்களாக மயில் ஒன்று சுற்றித் திரிந்து கொண்டிருந்தது.
இந்த மயில் நேற்று மாலை காச நோய் பிரிவின் அருகே இறந்து கிடந்தது.தகவலறிந்த கடலுார் வனச்சரக வனக்காப்பாளர் தணிகாசலம் சம்பவ இடத்திற்கு சென்று, இறந்து கிடந்த மயிலை மீட்டு கடலுார் கால்நடை மருத்துவனையில் உடற்கூராய்விற்காகஒப்படைத்தார்.அங்கு, உடற்கூராய்வு செய்யப்பட்டு, இதன் அறிக்கை வந்த பிறகே மயில் இறந்ததற்கான காரணங்கள் தெரியவரும் என வனத்துறை அதிகாரி தெரிவித்தார்.