திண்டுக்கல்;திண்டுக்கல்லில் உறவினர் வீட்டுக்கு சீர் கொண்டு சென்ற தளபதிராஜா28,பட்டாசு வெடித்ததில் , வலது கை விரல்கள் சிதறின.
திண்டுக்கல் செல்லாண்டியம்மன் கோவில் தெருவை சேர்ந்த கூலித்தொழிலாளி தளபதிராஜா28. இவர் நேற்று ஆர்.எம்.காலனியில் நடந்த உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது பெண்கள் சீர் கொண்டு போன போது தளபதி ராஜா கையில் பட்டாசு வைத்து வெடித்தார். எதிர்பாராத விதமாக வலது கையில் வைத்திருந்த பட்டாசில் தீப்பிடித்து வெடித்தது. தளபதிராஜாவின் வலது கை விரல்கள் ரோட்டில் சிதறியது. உறவினர்கள் அவரை மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.