பெங்களூரு-கர்நாடகாவின் பல இடங்களில், பா.ஜ., தொண்டர்கள் தாக்கப்படுவதை, மாநில பா.ஜ., தலைவர் நளின்குமார் கட்டீல் வன்மையாக கண்டித்தார்.
பெங்களூரில் நேற்று அவர் கூறியதாவது:
ஹொஸ்கோட் உட்பட, மாநிலத்தின் பல்வேறு இடங்களில், பா.ஜ., தொண்டர்கள் மீது, தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் அதிகரிக்கின்றன.
ஹொஸ்கோட்டில், தொண்டர் ஒருவர் கொலை செய்யப்பட்டார். மேலும் இருவர் தாக்கப்பட்டுள்ளனர். காங்கிரஸ் தலைவர்கள், இத்தகைய வன்முறை செயல்களுக்கு, ஊக்கமளிக்கக் கூடாது.
மாநிலத்தின் பல்வேறு இடங்களில், தேசத் துரோக செயல்கள் நடக்கின்றன. பாகிஸ்தான் கொடி ஏற்றியது தேசத் துரோக செயலாகும். இத்தகைய சம்பவங்களை, சகிக்க முடியாது. இது போன்ற ெயல்களுக்கு, ஆதரவளிப்போரை போலீசார் கைது செய்ய வேண்டும்.
காங்கிரஸ் தலைவர்கள் தங்களுக்கு இடையே உள்ள, கருத்து வேறுபாடுகளை ஓரங்கட்டி, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.