தாவணகெரே-ஹரிஹராவில் சொத்து தகராறில், அண்ணனை கொலை செய்த தம்பியை, போலீசார் தேடுகின்றனர்.
தாவணகெரே ஹரிஹராவின், பிரசாந்த் நகரில் வசிக்கும் குண்டப்பாவுக்கு இரண்டு மனைவியர் உள்ளனர். முதல் மனைவி லட்சுமம்மாவின், கடைசி மகன் குமார், 34, க்கும், இரண்டாவது மனைவி ரத்னம்மாவின் மகன் ராஜு, 40, க்கும், சொத்து விஷயமாக தகராறு இருந்தது. அவ்வப்போது சண்டை நடந்தது.
நேற்று முன் தினம் இரவு, குமார் தாவணகெரேவுக்கு சென்றுவிட்டு, பைக்கில் ஊருக்கு திரும்பினார். ஜகளூரில் அவரை வழிமறித்த ராஜுவும், அவரது கூட்டாளி மாருதியும், மனம் போனபடி தாக்கினர்.
இதில் காயமடைந்த குமார், ஹரிஹரா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அப்போது அங்கு வந்த ராஜு, குமாரை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடினார். தாவணகரே மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் போது, வழியில் உயிரிழந்தார்.
இதுகுறித்து ஹரிஹரா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.