புதுடில்லி : இந்திய ராணுவத் தளபதி மனோஜ் பாண்டே, இரண்டு நாள் பயணமாக இன்று வட கிழக்கு ஆப்ரிக்க நாடான எகிப்துக்கு செல்கிறார்.
அந்த நாட்டு மூத்த ராணுவத் தலைவர்களை சந்தித்து, இரு நாடுகளுக்கும் இடையிலான ராணுவ உறவுகளை மேம்படுத்த பேச்சு நடத்த உள்ளார்.
எகிப்து ராணுவ தளபதி, ராணுவ அமைச்சர் ஆகியோருடன் ஆலோசனை நடத்தவுள்ளார். மேலும், எகிப்திய ஆயுதப்படை செயல்பாட்டு ஆணையத்தின் தலைவருடன் விரிவான பேச்சு நடத்தவும் முடிவு செய்துள்ளார்.
இந்த பயணம், இரு நாடுகளின் ராணுவத்துக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் மேம்படுத்துவதுடன், இரு நாடுகளுக்கும் தொடர்புடைய பல முக்கிய பிரச்னை களில் நெருக்கமான ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்துழைப்புக்கு வழிவகுக்கும் என, ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.