சென்னை : சென்னை, சேப்பாக்கத்தில் ஐ.பி.எல்., 'பிளே ஆப்' போட்டியை காண வரும், ரசிகர்களை உற்சாகப்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது.இந்திய கிரிக்கெட்கவுன்சில் ஏற்பாட்டில், ஐ.பி.எல்., 20 'ஓவர்' கிரிக்கெட் போட்டிகள் நடந்து வருகின்றன.
இதில், சென்னை, மும்பை, கோல்கட்டா, பெங்களூரு உள்ளிட்ட, 10 அணிகள் விளையாடி வருகின்றன.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோதிய பல்வேறு போட்டிகள், சேப்பாக்கம் மைதானத்தில் நடந்தன.
போட்டியை காண வரும் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில், தமிழக கிரிக்கெட் அசோசியேஷன் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் 'ஸ்பான்சர்'கள் இணைந்து, பல்வேறுஏற்பாடுகளை செய்தனர்.
ரசிகர்களுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் 'டீஷர்ட்' மற்றும் தொப்பி உள்ளிட்டவை இலவசமாக வழங்கப்பட்டன.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னாவை அழைத்து வந்து, ரசிகர்களுக்கு உற்சாகம் அளிக்கப்பட்டது.
அணியின் பிரதான ஸ்பான்சரான, இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனம், இதற்கான ஏற்பாடுகளை செய்தது. இது ரசிகர்கள்மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
தற்போதைய நிலவரப்படி, புள்ளி பட்டியலில் சென்னை அணி,இரண்டாவது இடத்தில் உள்ளது.
சென்னை அணி மோதும் போட்டி, டில்லியில் 20ம் தேதி நடக்கஉள்ளது.
இதை தொடர்ந்து, 23ம் தேதி 'பிளே - ஆப் குவாலிபையர் - 1' போட்டியும், 24ம் தேதி எலிமினேட்டர் போட்டி யும் சென்னையில் நடக்க உள்ளன.
இந்த போட்டிகளை காண வரும் ரசிகர்களை உற்சாகப்படுத்த, தமிழக கிரிக்கெட் அசோசியேஷன் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஸ்பான்சர்கள் திட்டமிட்டு வருகின்றனர்.