விருதுநகர் : விருதுநகரில் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தினர் சார்பில் சங்க செயலாளர்களை பொதுப் பணி நிலைத் திறன் அமைப்பின் கீழ் பணிமாற்றம் செய்து மண்டல இணைப் பதிவாளர் உத்தரவிட்டதை ரத்து செய்யக் கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாநில கவுரவ பொதுச் செயலாளர் குப்புசாமி தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் காமராஜ் பாண்டியன் முன்னிலை வகித்தார். இதில் மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகிகள், நியாயவிலைக் கடை பணியாளர்கள், நகர கூட்டுறவு கடன் சங்க பணியாளர்கள் பங்கேற்றனர்.
மாவட்ட தலைவர் ராகவன், துணைத் தலைவர்கள் சவுந்தர பாண்டியன், தங்கபாண்டி, கவுரவ செயலாளர் மாரியப்பன் உட்பட பலர் பங்கேற்றனர்.