அந்தியூர்; அந்தியூர் அருகே ஜி.எஸ்., காலனி, ஓடைமேட்டை சேர்ந்தவர் ஜெயபாலன், 65 கூலி தொழிலாளி.
இவர், நேற்று அந்தியூர் போலீசில் தன் மகளை காணவில்லை என, புகார் மனு அளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது: என் மகள் பிருந்தாவுக்கு, 26 திருமணமாகவில்லை. ஐந்து ஆண்டுகளாக, பெருந்துறையில் உள்ள தனியார்
கம்பெனி ஒன்றில் பணி
புரிந்து வருகிறார். இரண்டு வாரங்களாக தன் மகள் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார்.
கடந்த, 13ல், கம்பெனிக்கு சென்று சம்பளம் வாங்கி வருவதாக கூறி சென்றவர், அதன் பின் வீடு திரும்பவில்லை. உறவினர்கள், நண்பர்கள் வீட்டில் தேடி பார்த்து எங்கும் கிடைக்கவில்லை. மகளை கண்டு பிடித்து தர வேண்டும்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.