சென்னை: கள்ளச்சாராய விற்பனை அனைத்தும் போலீசாருக்கு தெரியாமல் நடந்திருக்க வாய்ப்பில்லை என தமிழக பாஜ., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

இது குறித்து அண்ணாமலை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் கள்ளச்சாராயம் ஆறாக ஓடுவது அரசின் கைது நடவடிக்கைகளால் அம்பலமாகியுள்ளது. கள்ளச்சாராய விற்பனை அனைத்தும் போலீசாருக்கு தெரியாமல் நடந்திருக்க வாய்ப்பில்லை.
மதுவிலக்கு துறை அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு தெரியாமல் இத்தனையும் நடந்திருக்குமா?. அமைச்சர் செஞ்சி மஸ்தானுக்கு நெருக்கமானவரே மரக்காணம் துயர சம்பவத்திற்கு காரணம். குற்றவாளிகளை பாதுகாக்கும் நோக்கில் செந்தில்பாலாஜி, செஞ்சி மஸ்தான் செயல்படுகின்றனர்.

ஆட்சியாளர்களின் மெத்தனத்தால் ஏற்பட்ட உயிரிழப்பு. இந்த துயர சம்பவத்திற்குத் தொடர்பு உள்ள திமுக அமைச்சர்கள் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.