ஊத்துக்கோட்டை:திருவள்ளூர் போக்குவரத்துக் கழக பேருந்து டிப்போவில் ஓட்டுனராக பணியாற்றி வருபவர் ஆறுமுகம், 58. கடந்த, 14ம் தேதி, மாலை 6:00 மணிக்கு தடம் எண்.டி.52பி திருவள்ளூர் -- ராமஞ்சேரி வழித்தடத்தில் சென்று கொண்டு இருந்தது. நடத்துனராக அருள்தாஸ், 48, இருந்தார்.
ராமஞ்சேரி சென்று விட்டு, இரவு 7:30 மணிக்கு நெய்வேலி கூட்டுச்சாலையில் வந்து கொண்டு இருந்தபோது, ராமஞ்சேரி பகுதியைச் சேர்ந்த விஜய், 22, அஜித்குமார், 26, சவுரி, 53 ஆகிய மூன்று பேர் பேருந்தை நிறுத்தி, நடத்துனரை கல்லால் அடித்ததில் பலத்த காயம் அடைந்தார்.
மேலும், பேருந்தின் கண்ணாடியை அடித்து நொறுக்கினர். இதுகுறித்து ஆறுமுகம், பென்னலுார்பேட்டை போலீசில் புகார் செய்தார். அதன்படி, போலீசார் வழக்குப் பதிந்து, மூன்று பேரை கைது செய்து விசாரிக்கின்றனர்.