பாகூர் பிள்ளையார்குப்பம் தனியார் மருத்துவமனை டாக்டர் ஒருவர், கன்னியக்கோவில் சீனிவாசா கார்டனில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இவர், கடந்த வாரம் வீட்டை பூட்டிக் கொண்டு குடும்பத்துடன் வெளியூர் சென்றுள்ளார்.
இந்நிலையில் இவரது வீட்டின் கதவு நேற்று உடைந்து திறந்து கிடந்தது குறித்து அக்கம் பக்கத்தினர் டாக்டருக்கு போனில் தகவல் கொடுத்தனர். அவர் வெளியூரில் இருப்பதால், வீட்டின் உரிமையாளரை தொடர்பு கொண்டு தகவலை தெரிவித்துள்ளார்.
அவர் அளித்த தகவலின் பேரில் கிருமாம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு, விசாரணை நடத்தினர். வீட்டின் உரிமையாளர் வந்த பிறகே என்ன பொருட்கள் திருடு போனது என்பது மற்றும் அதன் மதிப்பு தெரிய வரும்.
குடியிருப்புகள் மத்தியில் உள்ள டாக்டரின் வீட்டின் கதவை உடைத்து மர்ம நபர்கள் கைவரிசை காட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.