விருத்தாசலம் : விருத்தாசலம் அருகே முந்திரி கொட்டை பொறுக்கிய பெண் நல்ல பாம்பு கடித்து பரிதாபமாக இறந்தார்.
விருத்தாசலம் அடுத்த கோ.மாவிடந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார் மனைவி ரஞ்சிதா, 23; இவர் நேற்று புதுக்கூரைப்பேட்டையைச் சேர்ந்த பொன்னன் என்பவரது முந்திரி தோப்பில், முந்திரி கொட்டை பொறுக்கினார்.அப்போது, முந்திரி மரத்தில் இருந்து நல்லபாம்பு, ரஞ்சிதாவை கடித்தது. உடன் அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக கூறினர்.
தகலறிந்து வந்த விருத்தாசலம் போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
ரஞ்சிதா இறப்பு குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.