சிவகங்கை : சிவகங்கை வாரச்சந்தை பகுதியில் கழிப்பறை கட்டும் பகுதியை மாற்றக்கோரி அப்பகுதியில் குடியிருப்போர் கலெக்டர் மதுசூதன்ரெட்டியிடம் மனு கொடுத்துள்ளனர்.
சிவகங்கை நகராட்சி கட்டுப்பாட்டில் நீதிபதி ராஜசேகரன் சாலையில் வாரச்சந்தைபுதன்தோறும் இயங்கி வருகிறது. அடிப்படை வசதி இல்லாமல் இயங்கி வந்ததால் வியாபாரிகள் கோரிக்கை விடுத்ததின் அடிப்படையில் நகராட்சி நிர்வாகம் சந்தை வளாகத்தை 3.89 கோடி ரூபாய் மதிப்பில் சீரமைக்கும் பணி செய்து வருகிறது.
தற்போது கட்டுமான பணி நடக்கும் நிலையில் மேல்புறமும், தென்புறத்திலும் கழிப்பறை கட்டப்படுகிறது.
குடியிருப்புகளுக்கு அருகே கழிப்பறை கட்டும் பணியால் சந்தைப்பகுதியை ஒட்டி குடியிருக்கும் மக்கள் சுகாதாரக்கேட்டாலும், துர் நாற்றத்தினாலும் பாதிக்கப்படுவர்.
மாற்று இடத்தில் கட்டுவதற்கு மாவட்டநிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்,என மனுவில் தெரிவித்துள்ளனர்.