அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை வெள்ளைச்சாமி கொத்தனார் தெருவை சேர்ந்தவர் ஜெயலட்சுமி, 71, இவரது கணவர் பரமசிவம் 20 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.
இவர்களுடைய ஒரே மகனும் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். வீட்டில் தனியாக ஜெயலட்சுமி வசித்து வந்தார்.
கடந்த 3 நாட்களாக இவர் வீட்டில் துர்நாற்றம் வீசியதையடுத்து, அருப்புக்கோட்டை டவுன் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், போலீசார் வீட்டிற்கு சென்று பார்த்ததில் வீட்டில் ஜெயலட்சுமி பிணமாக கிடந்துள்ளார். இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.