சூலூர்;கோவை மாவட்ட தேவர் பேரவை சார்பில், வெள்ளி விழா மாநாடு விளக்க கூட்டம் சூலூரில் நடந்தது.
கோவை மாவட்ட தேவர் பேரவை சார்பில், வரும், ஆகஸ்ட் 13ம் தேதி சூலூரில் வெள்ளி விழா மாநாடு நடக்க உள்ளது. இந்த மாநாடு தொடர்பான விளக்க கூட்டம், சூலூரில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்தது.
கோவை மாவட்ட தேவர் பேரவை தலைவர் சுந்தரம் பேசுகையில், கோவை மாவட்டத்தில் தேவர் பேரவை சார்பில், 24 ஆண்டுகளாக, 10 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, கல்வி ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. அரசு தேர்வு எழுதுவோருக்கு இலவச பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
பேரிடர் காலங்களில் நிவாரண உதவிகளும், மருத்துவ முகாம்களும் நடத்தி வருகிறோம். மாநாட்டில் அனைவரும், குடும்பத்தோடு கலந்து கொள்ள வேண்டும், என்றார்.
கூட்டத்தில், மாவட்ட, நகர, கிளை நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.