மயிலம்: கூட்டேரிப்பட்டு நான்கு முனை சந்திப்பில் வழிகாட்டி பலகை வைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கூட்டேரிப்பட்டு அமைந்துள்ளது. இங்கிருந்து மயிலம், புதுச்சேரி, செஞ்சி, வந்தவாசி, ரெட்டணை, விழுப்புரம் ஆகிய பகுதிகளுக்கு செல்லாம். மேலும் மயிலம் முருகன் கோவில், திருவக்கரை வக்கிர காளியம்மன் கோவில், பஞ்சவாடி பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில், சுற்றுலா தலங்களான ஆரோவில், வீடூர் டேம் போன்ற முக்கிய இடங்களுக்கும் செல்லலாம்.
சென்னை போன்ற பெரு நகரங்களிலிருந்து சுற்றலா வரும் பயணிகள், இப்பகுதிகளுக்குச் செல்ல வழிகாட்டி பலகை இல்லாததால் வழி தெரியாமல் தவிக்கின்றனர். மேலும் வாகனத்தை நிறுத்தி வழி கேட்ட பிறகு செல்லும் நிலை உள்ளது.
தற்போது, மேம்பாலம் பணிகள் நடந்து வருவதால் கூட்டேரிப்பட்டு அடையாளம் தெரியாத ஒரு பகுதியாக உள்ளது. எனவே கூட்டேரிப்பட்டு தேசிய நெடுஞ்சாலையின் மைய பகுதியில் வழிகாட்டி பலகை வைக்க வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.