சென்னை:நம் நாளிதழ் செய்தி எதிரொலியாக, தமிழகமருந்து கட்டுப்பாட்டு திட்ட இயக்குனராக லால்வினாநியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்ரமணியன் லண்டன் சென்றிருந்த நிலையில், மருந்து கட்டுப்பாட்டு துறைக்கு, அதன் இணை இயக்குனர் ஸ்ரீதர் பொறுப்பு இயக்குனராக நியமிக்கப்பட்டார்.
அவர் மீது, பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ள நிலையில், இதுகுறித்து நம் நாளிதழின், 'டீக்கடை பெஞ்ச்' பக்கத்தில் செய்தி வெளியிடப்பட்டது.
தொடர்ந்து, லண்டனில் இருந்து நேற்று காலை சென்னை வந்த அமைச்சர் கவனத்துக்கு இந்த விபரம் சென்றதும், உடனடியாக ஸ்ரீதரை நீக்க உத்தரவிட்டார்.
அவருக்கு பதிலாக, தமிழக உணவு பாதுகாப்பு துறை கமிஷனர் லால்வினா ஐ.ஏ.எஸ்., மருந்து கட்டுப்பாட்டு துறைக்கு இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கான உத்தரவை, மக்கள் நல்வாழ்வு துறை செயலர் ககன்தீப் சிங் பேடி பிறப்பித்து உள்ளார்.