விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயம் குடித்து பலர் உயிரிழந்தனர். இது குறித்து பத்திரிகைகளில்வெளியான செய்திகளின் அடிப்படையில், வழக்கு பதிந்துவிசாரித்த தேசிய மனித உரிமைஆணையம் பிறப்பித்த உத்தரவு:
தமிழகத்தில் கள்ளச்சாராய உயிரிழப்புகள் குறித்து,பத்திரிகைகளில் வந்த செய்திகள் உண்மையாக இருந்தால், அது மக்களின் வாழ்வுரிமையை மீறும் செயலாகும்.
சட்டவிரோத, போலி மதுபான விற்பனையை தடுக்க, மாநில அரசு தவறி விட்டது.
பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.
இந்த துயரங்களுக்கு காரணமான, தவறு செய்த அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், தமிழகத்தில் குறிப்பாக கடலோரங்களில் 'மெத்தனால்' மற்றும் தண்ணீர் கலந்து, மது விற்கப்படுவது குறித்தும், தமிழக தலைமை செயலர் மற்றும் டி.ஜி.பி., நான்கு வாரங்களுக்குள் அறிக்கை அளிக்க வேண்டும்.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.