ஈரோடு:ஈரோட்டில் உடல் வலி மாத்திரையை போதைக்கு பயன்படுத்தியதாக இரு பெண்கள் உட்பட ஏழு பேர் கைது செய்யப்பட்டனர்.
ஈரோடு கைகாட்டி வலசு பஸ் ஸ்டாப் அருகே ஒரு வீட்டில் இளம் பெண்கள் இளைஞர்கள் அடிக்கடி வந்து செல்வதாகவும் குடும்பம் நடத்துவதற்கான சூழல் காணப்படவில்லை என மதுவிலக்கு டி.எஸ்.பி. பவித்ராவிற்கு தகவல் கிடைத்தது.
போலீசார் அந்த வீட்டில் கண்காணிப்பில் ஈடுபட்ட போது அங்கிருந்தவாலிபர்கள் இளம் பெண்கள் போதை மயக்கத்தில் சுய நினைவின்றி கிடந்துள்ளனர்.
அவர்கள் அருகே மாத்திரை கவர் இன்ஜக்ஷன் டியூப் நீடில் பயன்படுத்தப்படாத மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
விசாரணையில் உடல் வலி போக்க டாக்டர்களால் நோயாளிகளுக்கு பரிந்துரைக்கும் மாத்திரைகளை துாளாக்கி நீரில் கலந்து ஊசி மூலம் நரம்பில் செலுத்தி போதை ஏற்றியது தெரியவந்தது.
இது 10 மாத்திரைகள் கொண்ட ஒரு அட்டை 300 ரூபாய்க்கு கிடைக்கும்.ஆனால் போதை ஆசாமிகளுக்கு 4000 ரூபாய் வரை விற்கப்படுகிறது. ஊசியால் 5 மணி நேரம் வரை போதை இருக்கும் என தெரியவந்துள்ளது.
வீரப்பன்சத்திரம் கருப்பணன் வீதி சுதர்சன் 21, கல்லாங்காடு விக்னேஷ் 26 உட்பட ஏழு பேர் கைது செய்யப்பட்டனர்.
இதில் விக்னேஷ் தந்தை முருகானந்தம் புன்செய்புளியம்பட்டி போலீசில் எஸ்.ஐ. யாக பணியாற்றி வருகிறார். இவரது மகன் போதை ஊசி விவகாரத்தில் சிக்கி உள்ளார்.
இவர்களிடம் இருந்து போதைக்கு பயன்படுத்தப்படும் உடல் வலி மாத்திரைகள், பைக், ஸ்கூட்டர் பறிமுதல் செய்யப்பட்டது.