மோடி தலைமைக்கு கிடைத்த தோல்வியல்ல! | Modis leadership is not a failure! | Dinamalar

மோடி தலைமைக்கு கிடைத்த தோல்வியல்ல!

Updated : மே 17, 2023 | Added : மே 17, 2023 | கருத்துகள் (55) | |
உலக, நாடு, தமிழக நடப்புகள் குறித்து வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம்கு.காந்திராஜா, சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கர்நாடகா மாநிலத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், பா.ஜ.,வுக்கு பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது. இதை, கர்நாடகாவில் நான்காண்டுகளாக பதவியில் இருந்த பா.ஜ., அரசின் சாதனைகள், வேதனைகள் அடிப்படையில், மக்கள் வழங்கிய தீர்ப்பாக பார்க்க
Modis leadership is not a failure!   மோடி தலைமைக்கு கிடைத்த தோல்வியல்ல!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone




உலக, நாடு, தமிழக நடப்புகள் குறித்து வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம்


கு.காந்திராஜா, சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கர்நாடகா மாநிலத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், பா.ஜ.,வுக்கு பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது. இதை, கர்நாடகாவில் நான்காண்டுகளாக பதவியில் இருந்த பா.ஜ., அரசின் சாதனைகள், வேதனைகள் அடிப்படையில், மக்கள் வழங்கிய தீர்ப்பாக பார்க்க முடியுமே தவிர, மத்தியில் ஆளும் மோடி அரசுக்கு எதிரான தீர்ப்பு என்று சொல்ல முடியாது; அப்படி சொன்னாலும், அது சரியானதல்ல.

ஏனெனில்...

கடந்த, 2019 லோக்சபா தேர்தலுக்கு முன், கர்நாடகா, ம.பி., ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்களில் நடந்த சட்டசபை தேர்தல்களில், பா.ஜ., தோல்வி அடைந்தது. அதேநேரத்தில், 2019ல் நடந்த லோக்சபா தேர்தலில், இந்த மாநிலங்களில், பா.ஜ., அதிக இடங்களில் வெற்றி பெற்றது. மேலும், தேசிய அளவில், 300க்கும் மேற்பட்ட இடங்களைப் பிடித்து, மோடி தலைமையில், இரண்டாவது முறையாக, பா.ஜ., ஆட்சி அமைத்தது


latest tamil news


சமீபத்தில் கர்நாடகா சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியான அதே நாளில், உ.பி.,யில், மாநகராட்சி தேர்தல் முடிவுகளும் வெளியாகின. அதில், மொத்தமுள்ள, 17 மேயர் பதவிகளையும், பா.ஜ.,வே கைப்பற்றியுள்ளது. அத்துடன், இரு சட்டசபை தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலிலும், பா.ஜ., கூட்டணியே வெற்றி பெற்றுள்ளது.

எனவே, மாநில தேர்தல் முடிவுகளை வைத்து, மத்தியில் உள்ள ஆட்சி பற்றிய முடிவுக்கு வருவது மடத்தனமானது. கர்நாடகாவில், 2018 சட்டசபை தேர்தலில், 104 இடங்களில் வெற்றி பெற்ற பா.ஜ., இந்த முறை, 66 இடங்களை மட்டுமே பிடித்துள்ளது. அதேநேரத்தில், கடந்த முறை பெற்ற, 36 சதவீத ஓட்டுகளையே, இம்முறையும் பெற்றுள்ளது.

கடந்த முறை, 80 தொகுதிகளில் வெற்றி பெற்று, 38 சதவீத ஓட்டுகளை பெற்ற காங்கிரஸ், இம்முறை, 5 சதவீதம் கூடுதலாக, 43 சதவீத ஓட்டுகளை பெற்றிருக்கிறது. முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி, 2018ல், 18 சதவீத ஓட்டுகளை பெற்று, 37 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. இந்த முறை, 5 சதவீத ஓட்டுகளை இழந்து, 19 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறது.

இதைப் பார்க்கும் போது, பா.ஜ.,வின் ஓட்டு சதவீதம் எந்த விதத்திலும் குறையவில்லை. அதேநேரத்தில், மதச்சார்பற்ற ஜனதா தளத்தின், 5 சதவீத ஓட்டுகள் தான், காங்கிரஸ் கட்சிக்கு சென்றிருக்கின்றன என்பதை, நாம் புரிந்து கொள்ள வேண்டும். இதுவே, காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்கவும் காரணம்.

பெண்களுக்கு மாதம், 2,000 உதவித்தொகை, மகளிருக்கு இலவச பஸ் பயணம், வீடுகளுக்கு, 200 யூனிட் இலவச மின்சாரம், வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம், 3,000 ரூபாய் உதவித்தொகை என, சகட்டு மேனிக்கு காங்கிரஸ் வாரி வழங்கிய இலவசங்கள் குறித்த வாக்குறுதிகளே, அக்கட்சிக்கு, 5 சதவீத ஓட்டுகள் கூடுதலாக விழக் காரணம்.

எனவே, கர்நாடகாவில் பா.ஜ.,வுக்கு ஏற்பட்ட தோல்வி, பிரதமர் மோடியின் தலைமைக்கு கிடைத்த தோல்வியல்ல!

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X