திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் தொகுதி எம்.எல்.ஏ., ராஜன் செல்லப்பா மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவுக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் முதற்கட்டமாக வெளிநோயாளிகளுக்கான வார்டு அமைக்க வேண்டும். ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லுாரியில் பயின்று வரும் 'எய்ம்ஸ்' மாணவர்களுக்கான நிரந்தர கட்டட வசதியை இந்தாண்டே நிறைவேற்ற வேண்டும், மருத்துவமனையின் தற்போதைய நிலை என்ன' என்று கேட்டு இருந்தார்.
இதற்கு மத்திய அமைச்சர் அனுப்பிய கடிதத்தில், 'ஜிகா' அமைப்புடனான ஒப்பந்தத்தின்படி 2026 அக்டோபரில் மருத்துவமனை பணிகள் முடிவடையும் இலக்கு உள்ளது.
இத்திட்டத்திற்கானமுன் முதலீட்டுப் பணிகள் முடிக்கப்பட்டு, கட்டுமான மேலாண்மை நிறுவனத்தை பணியமர்த்தஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
எய்ம்ஸ் மதுரை திட்ட தனிப்பிரிவுக்கு நிர்வாக இயக்குநர், கூடுதல் நிர்வாக இயக்குநர், கண்காணிப்பு பொறியாளர், நிர்வாக அலுவலர் நியமிக்கப்பட்டுஉள்ளனர், என தெரிவித்துஉள்ளார்.