கள்ளச்சாராய பலி, தொடர்பாக மத்திய அரசு, விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும், என புதிய தமிழகம் கட்சி நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி குற்றம் சாட்டினார்.
கோவையில் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி: தி.மு.க., ஆட்சிக்கு வந்தவுடன், மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என, முதல்வர் ஸ்டாலின் கூறினார். ஆனால் அமல்படுத்தவில்லை. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, மதியம், 12:00 முதல் இரவு, 10:00 மணி வரை மட்டுமே மது விற்பனை செய்ய வேண்டும். ஆனால், 24 மணி நேரமும் மது விற்கப்படுகிறது. இதன் வாயிலாக, ஒரு லட்சம் கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது.
இது குறித்து மத்திய அரசு, கமிஷன் அமைத்து விசாரிக்க வேண்டும். வழக்கு தொடர அனுமதிக்க வேண்டும் என, கவர்னரிடம் மனு கொடுத்துள்ளோம். கள்ளச்சாராயம் காய்ச்சிய, 1,500 பேர் உடனே கைது செய்யப்பட்டுள்ளனர். இது எப்படி சாத்தியம். அம்மாவட்ட அமைச்சர், எம்.எல்.ஏ.,க்களுக்கு தெரியாமல், மது விற்பனை நடந்ததா?
முதல்வர், அமைச்சர்கள் செந்தில்பாலாஜி, பொன்முடி ஆகியோர் பொறுப்பேற்க வேண்டும். அரிசி கடத்தல், கனிம வளம் கடத்தல், கள்ளச்சாராய பலி ஆகியவற்றுக்கு பொறுப்பேற்று, முதல்வர் ராஜினாமா செய்ய வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.