பேரூர் உட் கோட்டத்திற்குட்பட்ட வடவள்ளி, பேரூர், ஆலாந்துறை ஆகிய போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்கு ட்பட்ட பகுதிகளில், நேற்றுசட்டவிரோதமாக மது விற்பனை குறித்து, 'மாஸ் ரெய்டு' நடந்தது.
இதில், வடவள்ளி போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதிகளில், சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட, நால்வரை கைது செய்து, அவர்களிடமிருந்து, 290 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பேரூர் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதியில், மது விற்பனையில் ஈடுபட்ட நால்வரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 247 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஆலாந்துறை போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதியில், மது விற்பனையில் ஈடுபட்ட இருவரை கைது செய்த போலீசார், 149 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.