டி.என்.பாளையம்:டி.என்.பாளையம் அருகே, கொங்கர்பாளையம் கிராமத்தில் செந்தில்குமார் என்பவரது தோட்டத்தில் உள்ள கோழி பண்ணைக்குள், புகுந்த மர்ம விலங்கை கண்டறிய வனத்துறையினர் தானியங்கி கேமராக்களை பொருத்தி உள்ளனர்.
டி.என்.பாளையம் அருகே, கொங்கர்பாளையத்தை சேர்ந்த விவசாயி செந்தில்குமார், தோட்டத்தில் கோழிப்பண்ணை வைத்துள்ளார்.கோழிகளுக்கு தீவனம் வைப்பதற்காக, செந்தில்குமார் சென்ற போது மர்ம விலங்கு ஒன்று புகுந்தது தெரிய வந்தது. இது குறித்து, செந்தில்குமார்
டி.என்.பாளையம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
டி.என்.பாளையம் வனச் சரகர் கணேஷ் பாண்டியன் தலைமையில், வனத்துறையினர் கோழிப்பண்ணை பகுதியில் மர்ம விலங்கின் காலடி தடத்தை ஆய்வு செய்தனர்.
மர்ம விலங்கு நடமாடிய பகுதிகளில், மூன்று இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை வனத்துறையினர் பொருத்தி, கண்காணித்து வருகின்றனர்.
இதுகுறித்து, வனத்துறையினர் கூறியதாவது;
செந்தில்குமார் கோழிபண்ணையில் வாத்துகளும் வளர்க்கப்பட்டு வருகின்றன. இங்கு வந்த மர்ம விலங்கின் காலடித்தடத்தை ஆய்வு செய்த போது, சிறுத்தையின் காலடி தடம் இல்லை என்பது தெரிய வந்துள்ளது. அதனால் மரநாய் அல்லது காட்டு பூனையாக இருக்கலாம் என்பதால் அதை கண்காணிக்க கேமரா பொருத்தப்பட்டு
உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement