கரூர்: ஜெகதாபி ஊராட்சியில் வீடு வீடாக சென்று குழந்தைகளை
பள்ளியில் சேர்க்க கல்வித்துறை அதிகாரி கள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
கரூர் மாவட்டம், ஜெகதாபியில் உள்ள பொம்மணத்துப்பட்டி, அய்யம்பாளையம், பொரணி, அல்லாளி கவுண்டனுார் மற்றும் சுற்றுப்பகுதி குக்கிராமங்களில் பள்ளி செல்லா குழந்தைகள் பலர் உள்ளனர். அவர்களை கண்டறிந்து பள்ளியில் சேர்க்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.
அய்யம்பாளையத்தில், தான்தோன்றிமலை வட்டார கல்வி
அலுவலர் சகுந்தலா தலைமையில், பள்ளி செல்லா குழந்தைகள் உள்ள வீடுகளை கண்டறியும் பணியில் ஈடுபட்டனர். 'பள்ளி செல்லும் வயதில் உள்ள குழந்தைகள் அனைவரும் கண்டிப்பாக பள்ளிக்கு செல்ல வேண்டும். அரசு பள்ளிகளில்
தற்போது குழந்தைகளுக்கு காலை
சிற்றுண்டி முதல் அனைத்து வசதிகளும் செய்து தரப்படுகிறது. குழந்தைகளுக்கு கல்வி அறிவு எவ்வளவு முக்கியம் என்பதை பெற்றோர் உணர்ந்து குழந்தைகள் பள்ளி செல்லாமல் வீட்டில் இருப்பதையோ வேலைக்கு செல்வதையோ அனுமதிக்க கூடாது' என வலியுறுத்தினர். இதையடுத்து குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர் சம்மதம் தெரிவித்தனர்.