வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மத்திய பட்ஜெட்டில் மகிளா சம்மான் சேமிப்பு பத்திரம் என்பது பெண்களுக்காக அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் பெறப்படும் வட்டிக்கு, வரி பிடித்தம் கிடையாது என நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. மத்திய நேரடி வரிகள் வாரியமும் இது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
எந்த ஒரு பெண்ணும் தபால் நிலையத்தில் மகிளா சம்மான் கணக்கைத் தொடங்கலாம். அதே போல் பெண் குழந்தையின் பேரிலும் இந்த சேமிப்புப் பத்திரத்தில் பணம் போடலாம். மார்ச் 31, 2025 வரை தான் இத்திட்டம் அமலில் இருக்கும். அந்த தேதிக்குள் முதலீடு செய்யலாம். குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாயிலிருந்து, அதிகபட்சம் ரூ.2 லட்சம் வரை இதில் சேமிக்கலாம். அதற்கு ஆண்டு வட்டி விகிதம் 7.5% ஆகும். அதன் படி அதிகபட்சம் ரூ.2 லட்சம் டெபாசிட் செய்தால் ஓர் ஆண்டுக்கு ரூ.16 ஆயிரமும், 2 ஆண்டுகளில் ரூ.32 ஆயிரமும் வட்டி கிடைக்கும். மாதக் கணக்கில் பார்த்தால் ரூ.1,300 கிடைக்கிறது.
![]()
|
மகிளா சம்மான் சேமிப்பு பத்திரம் மூலம் பெறும் வட்டிக்கு டிடிஎஸ் எனும் வரிப் பிடித்தம் கிடையாது என நிதி அமைச்சகம் தற்போது கூறியுள்ளது. ஒரு நிதியாண்டில் பெறும் வட்டி ரூ.40 ஆயிரத்திற்கும் குறைவாக இருப்பதால் டிடிஎஸ் பொருந்தாது. அதே சமயம் அவர்களின் வருமானத்தில் இத்தொகை சேர்க்கப்பட்டு, நடைமுறையில் உள்ள வருமான வரி ஸ்லாபிற்கு ஏற்ப வரி கட்ட வேண்டும். ஆனால் அது ஆண்டுக்கு ரூ.5 லட்சத்திற்கு மேல் வருமானம் பெறுபவர்களுக்கு தான் என்பதால் கவலை இல்லை.