மேட்டுப்பாளையம்: சிறுமுகை, பாலசுப்பிரமணியர் கோவிலில், மண்டல பூஜை நடைபெற்று வருகிறது.
சிறுமுகை பழத்தோட்டத்தில், பவானி ஆற்றின் கரையோரம், ஆயிரம் ஆண்டுகள் பழமையான பாலசுப்பிரமணியர் கோவில் உள்ளது. கருவறை, விமானம், மகா மண்டபத்தில் பழுது நீக்கியும், புதிதாக மூன்று நிலை ராஜகோபுரம் அமைக்கப்பட்டது.
கற்பக விநாயகர், அர்த்தநாரீஸ்வரர், நவகோள் ஆகிய சன்னதிகள் புதிதாக கட்டி முடித்து, கடந்த மாதம், 24ம் தேதி கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. இதையடுத்து, 48 நாட்கள் கொண்ட மண்டல பூஜை தொடங்கி நடந்து வருகிறது.
நேற்று நடந்த மண்டல பூஜையில், சிறப்பு அலங்காரத்தில் பாலசுப்பிரமணியர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஜூன் மாதம் 11ம் தேதி, 48 நாட்கள் மண்டல பூஜை நிறைவு விழா நடக்கிறது. விழா ஏற்பாடுகளை, திருப்பணிகள் குழுவினர், கிருத்திகை வழிபாட்டு குழுவினர், ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.