அரசியல் செய்தி

தமிழ்நாடு

உள்ளாட்சி தேர்தலை அமைதியாக நடத்த ஏற்பாடுகள் மும்முரம்: நாளை ஓட்டுப்பதிவு

Updated : அக் 17, 2011 | Added : அக் 15, 2011 | கருத்துகள் (26)
Share
Advertisement
சென்னை: முதல் கட்டமாக, நாளை ஓட்டுப்பதிவு நடைபெறும் உள்ளாட்சி அமைப்புகளில், நேற்று மாலை 5மணியுடன் பிரசாரம் ஓய்ந்தது. சென்னை உள்ளிட்ட, 10 மாநகராட்சிகள், 60 நகராட்சிகள், 259 பேரூராட்சிகள், 191 ஊராட்சி ஒன்றியங்களுக்கு, நாளை ஓட்டுப்பதிவு நடக்கிறது. தேர்தலை அமைதியாக நடத்துவதற்கான ஏற்பாடுகள், தீவிரமாக நடந்து வருகின்றன. உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல், கடந்த 22ம் தேதி
Local Body Elections, Election Commission, உள்ளாட்சி தேர்தலை அமைதியாக நடத்த ஏற்பாடுகள் மும்முரம், நாளை ஓட்டுப்பதிவு,

சென்னை: முதல் கட்டமாக, நாளை ஓட்டுப்பதிவு நடைபெறும் உள்ளாட்சி அமைப்புகளில், நேற்று மாலை 5மணியுடன் பிரசாரம் ஓய்ந்தது. சென்னை உள்ளிட்ட, 10 மாநகராட்சிகள், 60 நகராட்சிகள், 259 பேரூராட்சிகள், 191 ஊராட்சி ஒன்றியங்களுக்கு, நாளை ஓட்டுப்பதிவு நடக்கிறது. தேர்தலை அமைதியாக நடத்துவதற்கான ஏற்பாடுகள், தீவிரமாக நடந்து வருகின்றன.

உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல், கடந்த 22ம் தேதி துவங்கியது. தி.மு.க., போன்ற ஒரு சில கட்சிகளின் வேட்பாளர்கள், வேட்பு மனுவை தாக்கல் செய்வதற்கு முன்பே பிரசாரத்தை துவக்கினர். அ.தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள், வேட்புமனு தாக்கலுக்குப் பின் துவக்கினர். காங்கிரஸ் - பா.ம.க., - ம.தி.மு.க., வேட்பாளர்கள், வேட்பு மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு, வேட்பாளர்களின் இறுதிப் பட்டியல் வெளியான பின் பிரசாரத்தை ஆரம்பித்தனர். தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், பா.ம.க., தலைவர் ராமதாஸ், ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ மற்றும் காங்.,தலைவர் தங்கபாலு, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், மத்திய அமைச்சர் வாசன் ஆகியோர், முதல் கட்டத்திலேயே பிரசாரத்தை மேற்கொண்டனர். தி.மு.க., தலைவர் கருணாநிதி, சென்னையில் திருவொற்றியூர், திருவான்மியூரில் நடந்த பொதுக்கூட்டங்களில் மட்டும் தி.மு.க., வேட்பாளர்களுக்கு ஓட்டு சேகரித்தார். முதல்வர் ஜெயலலிதா, 10 மாநகராட்சிகளிலும் பிரசாரம் செய்தார். கடைசி நாளான நேற்று, ஆலந்தூரில் துவக்கி கே.கே.நகர், அரும்பாக்கம், கொரட்டூர், அயனாவரம், ஓட்டேரி, புரசைவாக்கம் பகுதிகளில் வேனில் பிரசாரம் செய்து முடித்தார்.


பிரசாரத்தின் இறுதி நாளான நேற்று காலை முதலே பிரசாரம் களைகட்டியது. கட்சி வேட்பாளர்கள், மேள தாளங்கள் முழங்க, இரு சக்கர வாகனங்களின் அணிவகுப்புடன் பிரசாரத்தைத் துவக்கினர். நகர் மற்றும் கிராமங்களில் சிறு சந்துகளைக் கூட விடாமல், பிரசார வேன்களில் சென்று ஓட்டு கேட்டனர். தேர்தலை அமைதியாக நடத்த தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசாரும், மாநில தேர்தல் கமிஷனும் இணைந்து செய்துள்ளன. பாதுகாப்பு குறித்து தேர்தல் பார்வையாளர்கள் நேரில் ஆய்வு செய்து ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.


Advertisement
வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sivakumar Nagarajan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
16-அக்-201113:50:01 IST Report Abuse
Sivakumar Nagarajan ஒட்டு கெடைக்கும்... ஆனா கெடைக்காது... யாருக்கு...?
Rate this:
Cancel
Paramesh - Coimabtore,இந்தியா
16-அக்-201113:19:38 IST Report Abuse
Paramesh வாக்களிக்க ஆள் உள்ளனர் உண்மைதான் ஆனால் அது உங்களுக்கென்று யார் சொன்னது....
Rate this:
Cancel
Paramesh - Coimabtore,இந்தியா
16-அக்-201113:17:37 IST Report Abuse
Paramesh யார் இந்த மரியா தி மு க வின் தீவிர விசுவாசி போல .....
Rate this:

Microsoft OLE DB Provider for SQL Server error '80040e31'

Query timeout expired

/xtralog_load_full_taboolabc.asp, line 394