திருப்பூர்: வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு திட்டம், பயறு வகை மற்றும் எண்ணெய் வித்துகள் திட்டத்தின் கீழ், நிலத்தை தயார்படுத்த டிராக்டரால் இயங்கக்கூடிய சுழல் கலப்பை, தார்பாலின், விசைத் தெளிப்பான் ஆகியவை மானிய விலையில் வழங்கப்படுகின்றன.
அவ்வகையில், மடத்துக்குளம் வட்டாரம், மைவாடியில் ராம்ராஜ், காரத்தொழுவில் வள்ளியம்மாள் ஆகியோருக்கு, மானிய திட்டத்தில் சுழல் கலப்பை வழங்கப்பட்டுள்ளது.
இதுதவிர, தார்பாலின் மற்றும் விசைத்தெளிப்பான்களும் வழங்கப்பட்டது. இப்பண்ணை கருவிகள் மற்றும் அவற்றின் பயன்பாடுகளை, உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு திட்ட தொழில்நுட்ப உதவியாளர் லாவண்யா, மடத்துக்குளம் வட்டார உதவி வேளாண்மை அலுவலர்கள் சுந்தரம், சிம்சன் மற்றும் ராஜசேகர் ஆகியோர் ஆய்வு செய்தனர்.