ஆவடி, ஆவடி, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் கோபால், 68; தனியார் நிறுவன காவலாளி. இவரது மனைவி இறந்து விட்டார். மகனுக்கு திருமணமான நிலையில், இவர் மட்டும் தனியாக வசித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை 'காஸ்' சிலிண்டரில் கசிவு இருந்தது தெரியாமல், விளக்கை பற்ற வைத்தபோது, தீ விபத்து ஏற்பட்டது.
இதில், வீட்டின் முன்பகுதியில் உள்ள 'ஆஸ்பெட்டாஸ் ஷீட்' வெடித்து சிதறி, மேலும் வீட்டில் பொருட்கள் மற்றும் வீட்டின் அருகே நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோவும் சேதமடைந்தது.
இதில், பலத்த தீக்காயம் அடைந்த கோபால், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். ஆவடி போலீசார் விசாரிக்கின்றனர்.