சென்னை, புற்றுநோய் பாதித்த, 55 வயது நபருக்கு எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை அளித்து, எம்.ஜி.எம்., புற்று நோய் மருத்துவமனை டாக்டர்கள் மறுவாழ்வு அளித்துள்ளனர்.
இதுகுறித்து, மருத்துவமனையின் ரத்த புற்றுநோய் துறை நிபுணர் கோபிநாதன் கூறியதாவது:
'மல்டிபிள் மைலோமா' என்ற சாற்றுப் புற்றுநோயால், 55 வயது நபர் பாதிக்கப்பட்டு, எம்.ஜி.எம்., மருத்துவமனைக்கு வந்தார். இது, ஒரு வகை ரத்த புற்றுநோய் பாதிப்பு. எலும்பு மஜ்ஜையில் இயல்புக்கு மாறாக, அதிக அளவில் 'பிளாஸ்மா' செல்கள் உருவாவதால், இயல்பான ரத்த செல்கள் சிறுநீரகம், எலும்புகளை பாதிக்கிறது.
நோயாளிக்கு இருந்த சிக்கல்களை கருத்தில் கொண்டு, 'ஸ்டெம்செல்' என்ற உயிரணுக்கள் சேகரிக்கும் சிறப்பு ஊசி மருந்து செலுத்தப்பட்டது.
அதன் பின், 'கீமோதெரபி' சிகிச்சை அளிக்கப்பட்டு, 24 மணி நேரத்திற்குப் பின், உயிரணு செல்களை அவருக்கு செலுத்தினோம்.
இவை, எலும்பு மஜ்ஜைக்கு இடமாறி, மறு உருவாக்க பணியை துவங்கும். இதன் வாயிலாக, எலும்பு மஜ்ஜை மாற்றுப்பதிவு செய்யப்பட்டு, தொடர் மருத்துவ கண்காணிப்புக்குப் பின், அவர் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.