கோவை: உயர் ரத்த அழுத்தம் தினம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஒவ்வொரு ஆண்டும், மே 17ம் தேதி உலக உயர் ரத்த அழுத்த தினம் கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி, பிசியோதெரபி கல்லுாரியின், 'ரோட்டராட் 'சார்பில், சேரன் பிசியோதெரபி புற நோயாளிகள் பிரிவில், இலவசமாக பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில், உயர் ரத்த அழுத்தம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வும் அளிக்கப்பட்டது. சுமார், 70க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்று பயனடைந்தனர்.