கோவை: காந்திபுரம் டவுன் பஸ் ஸ்டாண்டுக்குள் உள்ள மொபைல் கடையின் உள்ளே இருந்து, பாம்பு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
காந்திபுரம் டவுன் பஸ் ஸ்டாண்டுக்குள் உள்ள, மொபைல் போன் கடை ஒன்றில், நேற்று மதியம் 3:45 மணியளவில், அதன் உரிமையாளர் வெங்கடேஷ் அமர்ந்து போன் பார்த்துக் கொண்டிருந்தார்.
அப்போது, கடையின் பக்கவாட்டு ஷெல்பில் இருந்து ஒரு பாம்பு, மெதுவாக ஊர்ந்து வந்தது. வெளியேற வழி தேடி, அந்த பாம்பு மிக அருகில் வந்தபிறகே, வெங்கடேஷ் அதைக் கவனித்தார். அவர் துள்ளி எழுந்ததும், பாம்பு கடையில் பக்கவாட்டு கார்ட்போர்டு சுவர் அருகே மறைந்தது. “திடீரென பாம்பு வந்ததும் திகைத்து விட்டேன். பாம்பு பிடிப்பவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் வருவதற்குள், அருகில் இருந்த கண்டக்டர்கள் உள்ளிட்டோர் சேர்ந்து பாம்பைத் தேடினோம். ஆனால், அது சென்று விட்டது. பாம்புக்கோ, மனிதர்களுக்கோ தீங்கு ஏற்படவில்லை,” என, வெங்கடேஷ் தெரிவித்தார்.