வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: 'டாடா' குழுமத்தின் தலைவர், என்.சந்திரசேகரனுக்கு, பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான, 'செவாலியே' விருது வழங்கப்பட்டுள்ளது.
கடந்த செவ்வாயன்று, பிரான்ஸ் நாட்டின் அரசு, இந்த விருதை வழங்கி கவுரவித்துள்ளது. செவாலியே விருதை, பிரான்ஸ் அதிபர் சார்பில், அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் கேத்தரின் கொலோனா வழங்கினார். இந்தியா மற்றும் பிரான்ஸ் நாடுகளிடையே உள்ள வர்த்தக உறவை வலுப்படுத்துவதற்கு உதவியாக இருந்த காரணத்தை முன்னிட்டு, இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.

அண்மையில் டாடா குழுமத்திற்கு சொந்தமான, 'ஏர் இந்தியா' நிறுவனத்திற்கான விமானங்களை வாங்க, பிரான்ஸ் நாட்டின் விமானத் தயாரிப்பு நிறுவனமான 'ஏர்பஸ்' உடன், ஒரு ஒப்பந்தத்தை, டாடா மேற்கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.