சிவகாசி ---சிவகாசி ஆர்.எஸ்.ஆர்., இன்டர்நேஷனல் பள்ளியில் இரு வாரம் சிறுவர்களுக்கான கோடை கால சிறப்பு பயிற்சி தலைமயாசிரியர் முன்னிலையில் நடத்தப்பட்டது.
இப்பயிற்சியின் மூலம் மாணவர்களின் தனித்திறமை வெளிக்கொணரப்பட்டு, அவர்களின் செயல்திறன் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாய் இருக்க ஒரு வாய்ப்பாக அமைந்தது. இதில் மற்ற பள்ளியில் பயிலும் மாணவர்களும் பங்கேற்றனர்.
பயிற்சியில் பங்கேற்ற மாணவர்களுக்கு பள்ளி தலைவர் சண்முகையா சான்றிதழ் வழங்கினார். பள்ளி முதல்வர் முத்துலட்சுமி, நிர்வாக அலுவலர் சந்திரராஜன் உடனிருந்தனர்.