புதுச்சேரி : போலீஸ் ஐ.ஜி. சந்திரன் வரும் 31ம் தேதி ஓய்வு பெறுகிறார்.
புதுச்சேரி போலீஸ் ஐ.ஜி. சந்திரன். இவர் கடந்த 2003ம் ஆண்டு ஐ.பி.எஸ்., அதிகாரியானார். சீனியர் எஸ்.பி., டி.ஐ.ஜி உள்ளிட்ட பதவிகள் வகித்தவர்.
புதுச்சேரி, அந்தமான், அருணாசலபிரதேசம் உள்ளிட்ட யூனியன் பிரதேசங்களில் பணியாற்றிய இவர் தற்போது, புதுச்சேரியில் ஐ.ஜி.யாகி பணியாற்றி வருகிறார்.
இவர் வரும் 31ம் தேதியுடன் பணி ஓய்வு பெறுகிறார். இதற்கான அறிவிப்பை பணியாளர் நலம் மற்றும் நிர்வாக சீர்த்திருத்த துறை சார்பு செயலர் ஜெய்சங்கர் வெளியிட்டுள்ளார்.