புதுச்சேரி, : வில்லியனுாரில் ஓட்டலில் வேலை செய்யும் வடமாநில தொழிலாளர்களை பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 5 பேரை போலீசார் தேடிவருகின்றனர்.
காஷ்மீரைச் சேர்ந்தவர் ஆசிப் நசீர்பட்,39; கடந்த 15 ஆண்டாக குடும்பத்துடன், புதுச்சேரி மிஷன் வீதியில் வசித்து வரும் இவர், வில்லியனுாரில் கடந்த 9 மாதங்களாக ரெஸ்டாரண்ட் நடத்தி வருகிறார்.
இங்கு வேலை செய்து வரும் மேற்கு வங்கத்தை சேர்ந்த ேஷக் ரகிமுதின்,21; அப்துல் ரசாக்கான்,19; ரூப்கான்,21; உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த ரோஷன் அலி,19; போலநாத்,26; ஆகியோர் நேற்று முன்தினம் இரவு 11:30 மணிக்கு ரெஸ்டாரண்ட்டில் வேலையை முடித்துவிட்டு தாங்கள் தங்கியுள்ள வீட்டிற்கு வில்லியனுார் பெரம்பை ரோட்டில் நடந்து சென்றனர்.
அப்போது, வில்லியனுாரை சேர்ந்த குமார்(எ) செல்வக்குமார், கிரி, மோகன் மற்றும் இருவர், வடமாநில தொழிலாளர்களை வழிமறித்து நிறுத்தினர். ஆனால், அவர்கள் நிற்காமல் நடந்து சென்றனர்.
ஆத்திரமடைந்த குமார் உள்ளிட்டோர், வடமாநில தொழிலாளர்களை தாக்கினர். குமார், இனி உங்களை இப்பகுதியில் பார்த்தால் அடித்து கொலை செய்து விடுவோம் எனக்கூறி கையில் வைத்திருந்த பீர் பாட்டிலால் தாக்கிவிட்டு தப்பிச் சென்றனர். அதில், ேஷக்ரகிமுதின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதுகுறித்து, ஆசிப் நசிர்பட் அளித்த புகாரின்பேரில், வில்லியனுார் போலீசார் வழக்கு பதிந்து, குமார் உள்ளிட்டோரை தேடிவருகின்றனர்.