மதுரை,-மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு கோடைகால பயிற்சி முகாம் நிறைவு விழா நடந்தது.
மே 1 முதல் 15 வரை நடந்த இம்முகாமில் 202 மாணவர்கள் பங்கேற்றனர். மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா, தமிழ்நாடு சிறப்பு காவல்படை எஸ்.பி., பாஸ்கரன், விளையாட்டு மேம்பாட்டு ஆணைய முன்னாள் மண்டல முதுநிலை மேலாளர் முருகன், பின் லைப் நிர்வாக மேலாளர்தளபதி ஜெயராமன், மாவட்ட நீச்சல் கழக செயலாளர் கண்ணன், இந்தியன் வங்கி கிளை மேலாளர் பாலகுமார், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி தலைமை மேலாளர் அண்ணாமலை, முன்னாள் மாவட்ட விளையாட்டு அலுவலர் பிரகாசம், விளையாட்டு விடுதி மேலாளர் கண்ணன் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கினர்.
பயிற்சியாளர்கள் ஜோதிபாசு, ராஜசேகர், ரஞ்சித்குமார், குமரேசன், பாலாஜி, தீபா, முத்துலிங்கம், விஜயகுமார், சிவக்குமார், கருணாகரன் பயிற்சி அளித்தனர். ''இம்முகாமில் பங்கேற்ற மாணவர்களுக்கு விளையாட்டு விடுதி சேர்க்கையில் முன்னுரிமை அளிக்கப்படும்'' என தெரிவித்தனர்.