சென்னை: 'உறுப்பினர்கள் சேர்க்கையை தீவிரப்படுத்த வேண்டும்' என, மாவட்ட செயலர்களுக்கு, அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி அறிவுறுத்தி உள்ளார்.
அ.தி.மு.க., மாவட்ட செயலர்கள் கூட்டம், நேற்று மாலை, அக்கட்சி தலைமை அலுவலகத்தில், பொதுச் செயலர் பழனிசாமி தலைமையில் நடந்தது.
கூட்டத்தில், 'உறுப்பினர்கள் எண்ணிக்கையை, 2 கோடியாக உயர்த்த வேண்டும்; அப்பணியை தீவிரப்படுத்துங்கள். ஆக., 20ம் தேதி மதுரையில் நடக்கும் மாநாட்டில் அதை அறிவிக்க வேண்டும். மாநாட்டை சிறப்பாக நடத்த வேண்டும்' என, பழனிசாமி அறிவுறுத்தினார்.