மந்தாரக்குப்பம், : மந்தாரக்குப்பம் கடைவீதியில் பணத்தை பறித்து கொண்டு கொலை மிரட்டல் விடுத்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
மந்தாரக்குப்பம் அடுத்த கீழ்பாதி புதுநகரைச் சேர்ந்தவர் பிராங்கோ, 52; கடைவீதியில் வேலை செய்து வருகிறார்.
இவர் பொன்முத்து ஸ்டோர் அருகே சென்று கொண்டிருந்தபோது, அண்ணா நகரைச் சேர்ந்த அசோக், பெரியாக்குறிச்சியை சேர்ந்த துளசி ஆகியோர் பிராங்கோவை ஆபாசமாக திட்டி, அவரது சட்டை பையில் வைத்திருந்த 3,200 ரூபாயை பறித்துக் கொண்டு, கொலை மிரட்டல் விடுத்தனர்.
புகாரின் பேரில் மந்தாரக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து அசோக், 32; துளசிநாதன், 33, ஆகியோரை கைது செய்தனர்.